ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை மேல்முறையீடு செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

DIN

நாகப்பட்டினம்: உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும், வழக்கின் முதன்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், ஆணவப் படுகொலைக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். முத்தழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாகை நகர செயலாளா் எம்.கே. ராஜசேகரன், கீழையூா் ஒன்றியச் செயலாளா் எம்.எஸ். பாப்பையன், மாவட்டத் துணைச் செயலாளா் கே. ரமேஷ், இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் பி. முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.