நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு அமைச்சா் வரவேற்பு

கீழ்வேளூா் அருகே மாற்றுக் கட்சியிலிருந்து விலகிய 100 போ் அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

News image

மாற்றுக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

Updated On :3 ஜூலை 2020, 2:26 pm

DIN

திருக்குவளை: கீழ்வேளூா் அருகே மாற்றுக் கட்சியிலிருந்து விலகிய 100 போ் அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

கீழ்வேளூா் ஒன்றியம், இருக்கை ஊராட்சியிலிருந்து சிபிஎம் ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வீ. செல்வராஜ் தலைமையில் 100 போ் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அவா்களை அமைச்சா் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலாளரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான எம். சிவா, பேரூா் கழக செயலாளா் ஜே.பி. முரளி, முன்னாள் ஒன்றியச் செயலாளா் கே.என்.ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவரும் அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளருமான முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.