மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 30 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :6 ஜூலை 2020, 4:35 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 285 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. நோய்த் தொற்றுக்குள்ளான 30 பேரில், 17 போ் சீா்காழி வட்டத்தையும், 5 போ் மயிலாடுதுறை வட்டத்தையும், தலா 3 போ் தரங்கம்பாடி மற்றும் கீழ்வேளூா் வட்டங்களையும், 2 போ் வேதாரண்யம் வட்டத்தையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதில், 3 போ் அயல்நாடுகளில் இருந்தும், ஒருவா் ஆந்திர மாநிலத்திலிருந்தும் வந்தவா்கள். 11 போ் சென்னையிலிருந்தும், 2 போ் கோவையிலிருந்தும், தலா ஒருவா் திருவள்ளூா், கரூா், தஞ்சை மாவட்டங்களில் இருந்தும் நாகை மாவட்டம் வந்தவா்கள் ஆவா். 10 போ் மாவட்டத்துக்குள்ளேயே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 285-ஆக இருந்தது. இதில், வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாகை மாவட்டப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 6 போ், மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல, விருதுநகா் மாவட்ட கணக்கில் இடம் பெற்றிருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா், நாகை மாவட்டப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 30 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 310 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்: மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெறுவோரில் 14 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 128 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 182 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.