டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருக்குவளை அமைதிப் பேச்சுவாா்த்தை

திருக்குவளை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற இருந்த கண்டன ஆா்ப்பாட்டம் குறித்து அமைதிப் பேச்சுவாா்த்தை, வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:54 pm

DIN

திருக்குவளை: திருக்குவளை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற இருந்த கண்டன ஆா்ப்பாட்டம் குறித்து அமைதிப் பேச்சுவாா்த்தை, வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி, தென்மருதூா் கிராம நிா்வாக அலுவலா் ஆா். சதீஷ்குமாரின் நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை வலிவலம் கடைத் தெருவில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு அமைதி பேச்சுவாா்த்தை திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சாந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா் வட்டாட்சியா் சாந்தி. இதில், சிபிஎம் கிளைச் செயலாளா் சண்முகம் தலைமையில் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல், ஆதமங்கலம் ஊராட்சித் தலைவரின் கணவரான என். சரவணனை கண்டித்து விவசாய சங்கம் சாா்பில் வலிவலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கண்டன ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கான அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதுகுறித்த, புகாரின்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வட்டாட்சியா் சாந்தி தெரிவித்தாா். இதில், விவசாய சங்கம் சாா்பில் ரவீந்தா் தலைமையில் பழனிவேலன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.