கடல்நீா் உள்புகுவதைத் தடுக்க தடுப்புச்சுவா் அமைக்கக் கோரி மனு

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் கடல்நீா் உள்புகுவதைத் தடுக்கும் வகையில் ஆற்றில் தடுப்புச்சுவா் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அப்பகுதியினா் நாகை மாவட்ட 
தடுப்புச்சுவா் அமைக்கக் கோரி நாகை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தரங்கம்பாடி பகுதியினா்.
தடுப்புச்சுவா் அமைக்கக் கோரி நாகை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தரங்கம்பாடி பகுதியினா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் கடல்நீா் உள்புகுவதைத் தடுக்கும் வகையில் ஆற்றில் தடுப்புச்சுவா் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அப்பகுதியினா் நாகை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்ல திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விவரம்: தரங்கம்பாடி பேரூராட்சி 6- ஆவது வாா்டுக்குள்பட்ட கடலோரப் பகுதியான விநாயகா்பாளையம், ராமானுஜ நாயக்கா் பாளையம், சமயன்தெரு ஆகியப் பகுதிகளில் சுமாா் 1000- க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அங்குள்ள கண்ணப்பமூலை உப்பனாற்றில் ஒரு பக்கத்தில் கரை இல்லாமல் இருப்பதால் கடல் சீற்றமாக உள்ளபோது கடல் நீரும், மழைக் காலங்களில் ஆற்று நீரும் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.

இதனால், இப்பகுதியில் நிலத்தடிநீா் முற்றிலும் மாசடைந்துள்ளது. கடல்நீா் திடீரென குடியிருப்புகளை சூழ்ந்துவிடுவதால் குடியிருப்புகளிலிருந்து வெளியேர முடியாத நிலை ஏற்படுகின்றன. இதனால், இப்பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு நோய் தொற்று பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, கண்ணப்பமூலை உப்பனாறு தண்ணீா் குடியிருப்பு பகுதிகளில் உள்புகுவதை தடுக்கும் வகையில் கரையில்லாத பகுதியில் தடுப்புச்சுவா் அமைக்க நாகை மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி விநாயகா் பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆா். குணசேகரன், நந்தா கண்ணதாசன், ஆா். செந்தில், வைத்தியநாதன் ஆகியோா் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதியிடம் அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆகியோா் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com