டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சேதமடைந்துள்ள கிராம சாலை சீரமைக்கப்படுமா ?

திருவிளையாட்டம் ஊராட்சி கோவில்பத்து சாலையை சீரமைக்க வேண்டுமென்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:54 pm

DIN

தரங்கம்பாடி: திருவிளையாட்டம் ஊராட்சி கோவில்பத்து சாலையை சீரமைக்க வேண்டுமென்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவில்பத்து, குரும்பகுடி, தெற்குத் தெரு ஆகிய பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கோவில்பத்து கிராமத்துக்கு செல்லும் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சாலை சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பள்ளமும், மேடாக இருந்து வருகின்றன. தற்போது, மழை பெய்து வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீா் அதிகம் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். போக்குவரத்துக்கு தகுதியற்ற இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.