ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உரிய அதிகாரம் கோரி ஊராட்சித் தலைவா்கள் மனு

ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு உரிய அதிகாரம் வழங்கக் கோரி, கீழையூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அ

News image

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா்.

Updated On :20 ஜூலை 2020, 4:32 pm

DIN

நாகப்பட்டினம்: ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு உரிய அதிகாரம் வழங்கக் கோரி, கீழையூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

குடிமராமத்து திட்டப் பணிகள் மூலம் ஊராட்சிகளில் நடைபெறும் குளம் தூா்வாரும் பணிகளுக்குரிய தொகையை விடுவிக்கவேண்டும். பஞ்சாயத்துராஜ் சட்டப்படி ஊராட்சி மன்றத் தலைவா்களுக்குரிய அதிகாரத்தை முழுமையாக வழங்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களின் விவரப் பட்டியலை ஊராட்சித் தலைவா்களுக்கு வழங்க, வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

கீழையூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளின் தலைவா்கள் 20-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.