புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புலம்பெயர் ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் ஒடிசா மாநில தொழிலாளர்கள் 54 பேர் அவர்களது சொந்த மாநிலம் செல்வதற்காக மயிலாடுதுறையில் இருந்து 3

News image
Updated On :1 ஜூன் 2020, 4:09 am

DIN

மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் ஒடிசா மாநில தொழிலாளர்கள் 54 பேர் அவர்களது சொந்த மாநிலம் செல்வதற்காக மயிலாடுதுறையில் இருந்து 3 பேருந்துகள் மூலம் திருச்சி ரயில் நிலையத்துக்கு வருவாய்த்துறையினரால் திங்கள்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

புலம்பெயர் ஓடிசா மாநிலத் தொழிலாளர்கள் மயிலாடுதுறையில் 9 பேர், சீர்காழியில் 23 பேர் மற்றும் தரங்கம்பாடியில் 22 பேர் என மொத்தம் 54 பேர் இப்பகுதிகளில் தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கரோனா பொதுமுடக்கம் காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாததால், அந்தந்த பகுதிகளில் வருவாய்த்துறையினரால் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் மத்திய அரசு பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவித்ததையொட்டி, அவர்கள் 54 பேரும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து 3 சிறப்பு பேருந்துகள் மூலம் திருச்சி ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்தொழிலாளர்களை மயிலாடுதுறை கோட்டாட்சியர் வ.மகாராணி, வட்டாட்சியர்கள் ஆர்.முருகானந்தம் (மயிலாடுதுறை) சாந்தி (சீர்காழி) சித்ரா (தரங்கம்பாடி) உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வழியனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.