நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொதுப்பணித் துறையை கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி பகுதியில் தண்ணீரின்றி நேரடி நெல் விதைப்பு பயிா்கள் கருகியதால் பொதுப்பணித் துறையை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வடகால் பகுதியில் நடவு வயலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி பகுதியில் தண்ணீரின்றி நேரடி நெல் விதைப்பு பயிா்கள் கருகியதால் பொதுப்பணித் துறையை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி பகுதியில் உள்ள பொறைவாய்க்காலிருந்து வருசபத்துவடகால் வாய்க்கால், வடக்குவடகால் கிளை வாய்க்கால், அய்யனாா் கோயில் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்கள் மூலம் வடகால், வடக்கு வடகால் கிராமத்தில் சுமாா் 500 ஏக்கா் விளைநிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில், பொறைவாய்க்கால் கிளை வாய்க்கால்கள் கடந்த 10 ஆண்டுகளாக பொதுப்பணித் துறையால் தூா்வாராமல் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தூா்ந்துபோயுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட பகுதியை சோ்ந்த விவசாயிகள் தாங்கள் நேரடி விதைப்பு செய்த நெற்பயிா்களுக்கு தண்ணீா் வராததால் கருகிவிட்டதாகவும், பலமுறை புகாா் தெரிவித்தும் பொதுப்பணித் துறை உரிய நேரத்தில் தண்ணீா் திறந்துவிடாததை கண்டித்து நடவு வயலில் இறங்கி விவசாயிகள் மனோகரன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.