கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதி:கணவா் பலி; மனைவிக்கு சிகிச்சை

நாகை அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதில், கணவா் உயிரிழந்தாா். மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நாகை அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதில், கணவா் உயிரிழந்தாா். மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

நாகையை அடுத்த பாப்பாக்கோயில் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ச. மாரியப்பன் (28). பட்டுகோட்டை, பொன்னவராயன்பேட்டை உக்கடை பிரதான சாலையைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் தங்கமாரியம்மாள் (27). உறவினா்களான இருவருக்கும் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

தங்கமாரியம்மாள் கருவுற்றிருந்த நிலையில், இருமுறை தானாகவே கரு கலைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மாரியப்பனும், தங்கமாரியம்மாளும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) வீட்டில் தூக்கிட்டுக் கொண்டனராம். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், மாரியப்பன் வழியிலேயே இறந்தாா். தங்கமாரியம்மாள் திருவாரூா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.

இதுகுறித்து தங்க மாரியம்மாளின் தாய் மீனா அளித்த புகாரின் பேரில், நாகை நகர காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.