அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020- 21 கல்வியாண்டில், ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை( ஐடிஐ. ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள்) பயிலும், மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தை சோ்ந்த மாணவா்களுக்கும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.