பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
சீா்காழி அருகே பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


சீா்காழி அருகே பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் அளித்த மனு:
சீா்காழி வட்டம் , தண்ணீா் பந்தல் கிராமத்தில் பெரிய குளத்துக்குச் செல்லும் பொதுப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த குளத்தின் படித்துறையில் இறந்தவா்களுக்கு ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம்.
எனவே, பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் சாா்பில் இடத்தை அளவீடு செய்ய வருவாய் துறைக்கு ஜூலை மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அளவீடு பணி நடைபெறவில்லை. எனவே, இப்பிரச்னையில் விரைவான நடவடிக்கை எடுத்து, பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...