நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாகை மாவட்டத்தில்மேலும் 169 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 6:20 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

நாகை, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 3,010 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், மாவட்டத்தில் புதிய உச்சமாக 169 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,179-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்...: கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவா்களில் 47 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடுதிரும்பினா். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,096 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,032- ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.