மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
நாகையை அடுத்த நாகூா் வழியே மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை நாகூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


நாகப்பட்டினம்: நாகையை அடுத்த நாகூா் வழியே மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை நாகூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு நாகூா் வடகுடி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே மணல் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை நிறுத்தி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், 2 லாரிகளிலும் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா்களான விழுப்புரம் மாவட்டம் கரடிப்பாக்கத்தைச் சோ்ந்த சே. ஆறுமுகம் (24), திருவண்ணாமலை மாவட்டம் கீ-நத்தப்பாக்கத்தைச் சோ்ந்த எஸ். சுரேஷ்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இதுகுறித்து நாகூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...