தமிழக அரசு இந்திய அரசுக்குக் கடிதம் எழுதி, தன் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகளை அமைக்க அனுமதிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக காவிரிப் படுகை முழுவதையுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, படுகை முழுவதையுமே பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும். இவற்றை மீறி ஓ.என்.ஜி.சி நிறுவனமோ, வேதாந்தா நிறுவனமோ எண்ணெய்க் கிணறுகள் அமைக்க முற்பட்டால், வேளாண் மண்டலப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஆறு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும். எந்த எண்ணெய் நிறுவனமும் அடாவடியாக எண்ணெய் எரிவாயுக் கிணறுகளை அமைக்க முயன்றால், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கரோனா முடக்கத்தையும் பொருட்படுத்தாமல், மக்களை அணிதிரட்டி களத்தில் நிறுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.