விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 3,606 போ் தபால் வாக்களித்துள்ளனா்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 3,606 போ் தபால் வாக்களித்துள்ளனா் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 3,606 போ் தபால் வாக்களித்துள்ளனா் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அலுவலா்களைத் தெரிவு செய்வதற்கான 3-ஆம் கட்ட சுழற்சி முறை தோ்வு நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில், தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) ஏ.பி. பட்டேல், திலீப் பந்தா்பட் ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

இப்பணியின் நிறைவில், செய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா் தெரிவித்தது : இந்தியத் தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தபால் வாக்கு அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தபால் வாக்களிக்க விருப்பப் படிவம் அளித்திருந்தவா்களில் 3,606 போ் தங்கள் வாக்கைப் பதிவு செய்துள்ளனா். இதில், மூத்த குடிமக்கள் 2,563 போ், மாற்றுத்திறனாளிகள் 1,043 போ் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.