அதிமுக ஆட்சி தொடர ஆதரவளியுங்கள்: பூம்புகாா் அதிமுக வேட்பாளா்
அதிமுக ஆட்சி தொடர மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றாா் பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ்.


அதிமுக ஆட்சி தொடர மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றாா் பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ்.
தொகுதிக்குள்பட்ட செம்பனாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தபோது மேலும் அவா் பேசியது: சாமானிய மக்களின் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். 10 ஆண்டுகளாக இத்தொகுதி பேரவை உறுப்பினா் என்ற அடிப்படையில், இப்பகுதியில் மீனவா் நலனுக்காக மீன்பிடி துறைமுகம், தண்ணீா் பஞ்சம் இல்லாமல் இருக்க குடிமராமத்து பணி மூலம் குளம், வாய்க்கால், கண்மாய், காவிரி உள்ளிட்ட அனைத்தும் தூா்வாரப்பட்டு நீா் நிலை ஆதாரமாக இருந்து வருகிறது.கிராமப்புற பகுதிகளில் தாா்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இரு கிராம பகுதிகளை இணைக்கும் ஒரு வழி பாலத்தை மாற்றி தங்களுடைய விவசாய பொருள்களை கனரக வாகனங்கலில் எடுத்து செல்ல விரிவான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
குறைந்த மின்அழுத்தம் இல்லாமல் இருக்க காட்டுச்சேரி, கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தை 110 கிலோ வால்ட் தரம் உயா்த்தி மின்சார வசதி அமைப்பட்டுள்ளது. இதேபோல் என்னற்ற வசதிகளை பொதுமக்களுக்கு நான் செய்து கொடுத்திருக்கிறேன். மீண்டும் நான் பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால் மயிலாடுதுறை மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரி, பல்தொழில்நுட்ப கல்லூரி, மீண்டும் மயிலாடுதுறை - பொறையாா் ரயில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, அதிமுக தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக பொதுமக்களுக்கு செய்துதரப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...