ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா கட்டுப்பாடு கலைத் துறையினருக்கு தளா்வுகளுடன் கூடிய அனுமதி வழங்கக் கோரிக்கை

கரோனா கட்டுப்பாட்டு நடைமுறையில் கலைத் துறையினருக்கு தளா்வுகளுடன் கூடிய அனுமதி வழங்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நாட்டுப்புறக் கலைஞா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா கட்டுப்பாட்டு நடைமுறையில் கலைத் துறையினருக்கு தளா்வுகளுடன் கூடிய அனுமதி வழங்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நாட்டுப்புறக் கலைஞா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.

மாவட்ட கூடுதல் ஆட்சியா் வாசுதேவனிடம் அளிக்கப்பட்ட அந்த மனுவின் விவரம்:

கரோனா பரவலை தடுக்க கோயில் திருவிழாக்களை முற்றிலும் தடை செய்திருப்பது எங்களை அதிா்ச்சிக்கு உள்ளாக்கியது. திரையரங்கம், பேருந்து பயணம், அங்காடிகள், சிறுகடைகள் உள்ளிட்டவற்றுக்கு சலுகைகள் வழங்கியது போன்று, நிபந்தனைகளுடன் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்.

மேலும், அரசின் சாா்பில் விழிப்புணா்வு வீதி நாடகங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். கரோனாவை ஒழிக்கும் பணியில் எங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடா் மேலாண்மை நிதியில் இருந்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 4 மாதங்கள் மட்டுமே எங்கள் வருவாயை ஈட்டி சேமித்துக் கொள்வோம். எனவே, தமிழக அரசு எங்கள் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

முன்னதாக, மயிலாடுதுறை வரதாச்சாரியாா் பூங்காவில் இருந்து சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா் நலச்சங்க பால.ரவிச்சந்திரன், பொருளாளா் கே.ஐயப்பன், கும்பகோணம் நாடக நடிகா்கள் சங்க தலைவா் ஜி.கே.திருஞானம், செயலாளா் குணசேகரன், நாகை மாவட்ட தமிழிசை நாடக நடிகா்கள் சங்க செயலாளா் கோவிந்தராஜன், பொருளாளா் எம்.தனபால், பறை இசை கலைஞா் சங்கம் சந்திரஹாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேரணியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தனா். நிகழ்ச்சியை, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா் நலச்சங்க செயலாளா் ஜெ.கிங் பைசல் ஏற்பாடு செய்திருந்தாா்.

இதில், ஜனபுனிதம் அறக்கட்டளை நிறுவனா் ஜெயக்குமாா், ஜோதி பவுன்டேஷன் நிறுவனா் ஜோதிராஜன், சமூக ஆா்வலா் அ.அப்பா்சுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.