மயிலாடுதுறையில் இருந்து நெல்மூட்டைகள் கிருஷ்ணகிரிக்கு அனுப்பிவைப்பு
மயிலாடுதுறையில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள நெல் அரைவை ஆலைக்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் ரயில் மூலம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.


மயிலாடுதுறையில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள நெல் அரைவை ஆலைக்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் ரயில் மூலம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் முதல் விவசாயிகளிடம் இருந்து 1.85 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 70 ஆயிரம் டன் நெல் அரைவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரைவை மில்லுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் கிடங்கிற்கு அனுப்பாமல் நேரடியாக அரைவை மில்லுக்கு அனுப்பப்படுகிறது. அவ்வகையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கிருஷ்ணகிரியில் உள்ள அரிசி அரைவை ஆலைக்கு 42 சரக்குப் பெட்டிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...