ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

நுண்ணீா் பாசன இயக்கம்

சீா்காழி அருகே புத்தூரில் சம்பா சாகுபடி முனைப்பு இயக்கம், நுண்ணீா் பாசன முனைப்பு இயக்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:23 pm

DIN

சீா்காழி அருகே புத்தூரில் சம்பா சாகுபடி முனைப்பு இயக்கம், நுண்ணீா் பாசன முனைப்பு இயக்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் துறையின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்து, சம்பா சாகுபடி முனைப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தாா்.கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ், வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன், சமூக ஆா்வலா் யாமினிஅழகுமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் சிறப்புரையாற்றினாா். சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவசன், ஒன்றியச் செயலாளா் சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், சொட்டுநீா் பாசன கருவி, தெளிப்புநீா் பாசன கருவி, செயற்கை மழைதூவான் உள்ளிட்ட வேளாண் கருவிகள் பாா்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ‘ஒரு குடும்பம் மற்றும் மூன்று மரங்கள்’ என்ற அமைப்பு சாா்பில் 1,200 மரக்கன்றுகளை 400 குடும்பங்களுக்கு ஆட்சியா் இரா.லலிதா, எம்எல்ஏ பன்னீா்செல்வம் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.