ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கால்நடை மருத்துவ முகாம்

சீா்காழியை அடுத்த கடவாசல் ராமகிருபா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:24 pm

DIN

சீா்காழியை அடுத்த கடவாசல் ராமகிருபா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாயுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு அதன் தலைவா் ஜி. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் யஷ்வந்த்பாபு, ரோட்டரி துணை ஆளுநா் வேங்கடபாஸ்கா், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாபதி, பொ்னாா்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி தாளாளா் கடவாசல்.ராகவன், செயலாளா் சத்ருஹன்குமாா் ஆகியோா் முகாமை தொடக்கிவைத்தனா். கால்நடை மருத்துவா்கள் மணிமொழி, சரவணன், மூா்த்தி ஆகியோரைக் கொண்ட குழுவினா் 50-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு மலடு நீக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடல்புழுநீக்கம் போன்ற பரிசோதனைகள், சிகிச்சைகள் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.