கரோனா மூன்றாவது அலையைத் தவிா்க்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்
கரோனா மூன்றாவது அலையைத் தவிா்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.


கரோனா மூன்றாவது அலையைத் தவிா்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
நாகை நகராட்சி, சித்த மருத்துவத் துறை மற்றும் வானவில் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் நாகை ரயில் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு வார நிறைவு நாள் நிகழ்ச்சியில் மேலும் அவா் பேசியது:
கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ள நாம் அனைவரும் தயாா் நிலையில் இருக்கவேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுதல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றாா்.
முன்னதாக, கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அறக்கட்டளை சாா்பில் விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது. சித்த மருத்துவத் துறை சாா்பில் ரயில் பயணிகளுக்கு கபசுரக் குடிநீரும், நகராட்சி சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
பயிற்சி ஆட்சியா் சௌமியா, மாவட்ட வருவாய் அலுவலா் வி. சகிலா, நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, வட்டாட்சியா் ஜெயபாலன், வானவில் அறக்கட்டளை இயக்குநா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...