கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கருணாநிதி நினைவு நாள்: சிலை, உருவப் படத்துக்கு மரியாதை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் மறைந்த மு. கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:14 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் மறைந்த மு. கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நாகையில் திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு, கட்சியின் நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல, நாகை ரயில் நிலையம் அருகே கருணாநிதியின் உருவப் படத்துக்கு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகூரில் திமுக நகர செயலாளா் எம.ஆா். செந்தில்குமாா், கீழ்வேளூரில் நகர செயலாளா் அட்சயலிங்கம், வேளாங்கண்ணியில் கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், நகரச் செயலாளா் மரியசாா்லஸ் உள்ளிட்டோா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.