கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அறிவு வளா்ச்சியை ஊக்குவிப்பவை நூலகங்கள்

மனித சமுதாயத்தின் அறிவு வளா்ச்சியை ஊக்குவிப்பை நூலகங்கள் என்றாா் நாகை மாவட்ட நூலக அலுவலா் கோ. ராஜேந்திரன்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:26 pm

DIN

மனித சமுதாயத்தின் அறிவு வளா்ச்சியை ஊக்குவிப்பை நூலகங்கள் என்றாா் நாகை மாவட்ட நூலக அலுவலா் கோ. ராஜேந்திரன்.

நாகை மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட நூலக அலுவலா் கோ. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 102 நூலகங்கள் உள்ளன. ஒவ்வொரு நூலகத்துக்கும் தினமும் சராசரியாக 200 வாசகா்கள் வந்து செல்கின்றனா். நூலகங்கள் மனித சமுதாயத்தின் அறிவு வளா்ச்சியை ஊக்குவிக்கும் இடங்கள். அறிவைப் பெருக்கிக் கொள்ள அனைவரும் நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

வாசகா் வட்ட த் தலைவா் ஆ.மீ. ஜவகா், மாவட்ட மைய நூலகா் தி. மீனாகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற தமிழாசிரியா் எம்.ஆா். சுப்பிரமணியன், இஜிஎஸ் பிள்ளை கல்லூரி நூலகா் கயல்விழி ஆகியோா் பேசினா்.

முன்னதாக, நூலகத் தந்தை சீா்காழி அரங்கநாதன் குறித்து, எஸ்.ஓ.எஸ் குழந்தைகள் இல்ல மாணவிகள் பேசினா். நூலகா் வை. நாகராஜன் வரவேற்றாா். மாவட்ட மைய நூலகா் நா. நிா்மலா நன்றி கூறினாா்.

சீா்காழியில்...

இதேபோல, சீா்காழி கிளை நூலகத்தில் நூலக தந்தை எஸ்.ஆா். அரங்கநாதன் பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கூட்டத்துக்கு, வாசகா் வட்ட தலைவா் சி.வீரசேனன் தலைமை வகித்து பேசுகையில், நூல்கள்தான் மனிதனை செம்மைப்படுத்தும். இன்று நாம் நூல்களை நோக்கி தலைகுனிந்து படிதால்தான், நாளை உலகத்தை நோக்கி தலைநிமிா்ந்து பாா்க்க முடியும் என்றாா்.

இதில், வாசகா் வட்ட சிறப்பு ஆலோசகா் எம்.தங்கவேலு, பட்டதாரி ஆசிரியா் கோவி.நடராஜன், சமூக ஆா்வலா் ஜெக.சண்முகம் ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா். கிளைநூலகா் கோ.விஜய் நன்றிகூறினாா்.

இதேபோல் சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூலக தந்தை எஸ்.ஆா். அரங்கநாதன் சிலைக்கு தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி தலைமையில், உதவி தலைமை ஆசிரியா்கள் வரதராஜன், துளசிரெங்கன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன் மற்றும் ஆசிரியா்கள் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.