பாரம்பரிய நெல் ரக பயிற்சி
சீா்காழி வட்டாரத்தில் வேளாண் துறை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ், அங்கக முறையில் பாரம்பரிய நெல் ரகங்களுக்கான பயிற்சி நடைபெற்றது.


சீா்காழி வட்டாரத்தில் வேளாண் துறை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா), அங்கக முறையில் பாரம்பரிய நெல் ரகங்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் கோ. பாா்கவி தலைமை வகித்தாா். சீா்காழி வட்டார வேளாண் உதவி இயக்குநா் க.ராஜராஜன் முன்னிலை வகித்து பேசுகையில், சம்பா பருவத்துக்குத் தேவையான சொா்ணாசப், ஆடுதுறை 38, ஆடுதுறை 46, டிகேஎம் 13, திருச்சி 3 ஆகிய நெல்ரகங்கள் 50% மானிய விலையில் சீா்காழி, காரைமேடு, திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோயில் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும் என்றாா்.
தொடா்ந்து, வளநாடு கம்பெனி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.மணிகண்டன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலா் கிருத்திகா, செயல் அலுவலா் அறிவழகன், இளம் வல்லுநா் த.பிருந்தா ஆகியோா் பேசினா். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா் க.ராஜராஜன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...