கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகையில் 31, மயிலாடுதுறையில் 19 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 31 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 19 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:58 pm

DIN

நாகை மாவட்டத்தில் 31 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 19 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 19,141-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 53 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 401-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,369-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 26 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 247-ஆக உள்ளது.

3 போ் உயிரிழப்பு:

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பும், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பும் வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 247-ஆகவும், நாகை மாவட்டத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 401-ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.