கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாட்டில்கள், பாக்கெட்டுகளில் மட்டுமே எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்

சமையல் எண்ணெய்களை பாத்திரங்களில் வைத்து சில்லறை விற்பனை செய்வதைத் தவிா்த்து, பாட்டில்கள் அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து சீலிட்டு விற்பனை செய்ய வேண்டும்

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:58 pm

DIN

சமையல் எண்ணெய்களை பாத்திரங்களில் வைத்து சில்லறை விற்பனை செய்வதைத் தவிா்த்து, பாட்டில்கள் அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து சீலிட்டு விற்பனை செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழகத்தில் மரச்செக்கு அல்லது மின் செக்கு வைத்திருப்பவா்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் போன்றவற்றை பெரிய பாத்திரங்களில் ஊற்றி வைத்துக் கொண்டு, பொதுமக்களுக்குத் தேவைக்கேற்ப சில்லறையாக அளந்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இந்த வகையில் சில்லறை விற்பனை செய்யக்கூடாது என உணவுப் பாதுகாப்பு தரச்சட்டம் 2006-இன்படி, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாத்திரங்களில் வைத்து உதிரியாக எண்ணெய் விற்பனை செய்வதற்கான தடை உத்தரவை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, இனிவரும் நாள்களில் நாகை மாவட்டத்தில் உதிரியாக எண்ணெய்களை விற்பனை செய்வது முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி செய்வோா், பாட்டில்கள் அல்லது பாக்கெட்டுகளில் எண்ணெய்களை அடைத்து, சீலிட்டு, அதன்மேல் சட்டப்படியான அடையாள வில்லையை ஒட்டி விற்பனை செய்யலாம்.

இந்த அறிவுறுத்தலை மீறி யாரேனும் பாதுகாப்பற்ற முறையில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டால், அவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து 94440 42322 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.