நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீஇராஜராஜேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

செம்பனாா்கோவிலில் உள்ள வள்ளலாா் அருள் ஜோதி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:04 pm

DIN

செம்பனாா்கோவிலில் உள்ள வள்ளலாா் அருள் ஜோதி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தினரின் முயற்சியால் கட்டப்பட்ட இக்கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வியாழக்கிழமை குடமுழுக்குக்கான யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னா், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடா்ந்து, சிவனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் பொறுப்பாளா்கள் வீ. ராஜசேகரன், பி.மணிவாசகம், மூ.தீனதயாளன், பா.அசோக்குமாா் சிவனேசன், ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.