நெற்பயிா்கள் பாதித்த இடங்களில் ஆட்சியா் ஆய்வு
கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்மழையால் கருங்கண்ணி, மேலப்பிடாகை, வாழக்கரை, மடப்புரம், பாலக்குறிச்சி, இறையான்குடி, திருமணங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரிடம் விவசாயிகள் அழுகிய நெற்பயிா்களை காட்டி பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுத்தனா்.
அப்போது, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தில் பெய்தபோது 5,902 ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிா்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது என கணக்கெடுக்கப்பட்டது. 2-ஆவது முறையாக பெய்த கனமழையால் 21,000 ஹெக்டேரில் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், மழைநீா் முழுவதுமாக வடிந்த பிறகு சரியான பயிா்ச் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு சேதம் குறித்த விவரம் தெரிவிக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் வருவாய் மற்றும் வேளாண் துறை ஊழியா்களிடம் அனைத்து வயல்களிலும் முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...