பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு
திருக்குவளை அருகே உள்ள கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை அருகே உள்ள கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். பால்ராஜ் தலைமை வகித்தாா். கீழையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி. கலையரசன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் கே. சரவணன் வரவேற்றாா். நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் ஜி. ஜெயா பங்கேற்று பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு பள்ளிக்கு அனுப்புதல், குழந்தை திருமணம் மற்றும் தற்கொலைகளை தடுத்தல் ஆகியவை குறித்து பேசினாா்.
மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல கிராமத்து மேடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...