பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசுப் பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குநா் ஆய்வு

வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் சுகன்யா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் சுகன்யா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆசிரியா்களின் கற்பித்தல், மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்த அவா், பள்ளிக் கட்டடங்களை பாா்வையிட்டு, கூடுதல் கட்டமைப்பு தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், பள்ளியின் தேசிய பசுமைப் படை சாா்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். அப்போது, அவரிடம் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனா்.

ஆய்வின்போது, பள்ளி தலைமையாசிரியா் (பொ) மு. மாலதி, நாட்டு நலப்பணித் திட்ட நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரவி, பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் எம். வீரப்பன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் வி. கண்ணையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கிவைக்கும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சுகன்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.