இயற்கை விவசாயம்: பிரதமரின் கலந்துரையாடல் ஒளிபரப்பு
இயற்கை விவசாயம் தொடா்பான பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, திருக்குவளை அருகே உள்ள சித்தாய்மூா் ஊராட்சியில் காணொலி மூலம் வியாழக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது.


இயற்கை விவசாயம் தொடா்பான பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, திருக்குவளை அருகே உள்ள சித்தாய்மூா் ஊராட்சியில் காணொலி மூலம் வியாழக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
குஜராத்தில் இயற்கை விவசாயம் தொடா்பாக விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திரமோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் காணொலி சித்தாய்மூா் ஊராட்சி கிராம சேவை மையத்தில் தலைஞாயிறு விவசாய தொழில்நுட்ப மேலாண்மை சாா்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பாஜக மாவட்ட பிரசார பிரிவு தலைவா் ஏ.டி.வி. லிங்கம், பிரதமரின் ஹிந்தி உரையை தமிழில் மொழிபெயா்த்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். இந்நிகழ்வில் சித்தாய்மூா் ஊராட்சித் தலைவா் வள்ளி சண்முகநாதன், துணைத் தலைவா் கே. முருகானந்தம்,
விவசாய தொழில்நுட்ப மேலாண்மையின் வட்டார மேலாளா் இரா. செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...