கல்லூரி மாணவி தற்கொலை: இளைஞா் கைது
வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சோ்ந்தவா் வேலாயுதம் மகள் வித்யா (21). இவரும், செட்டிபுலம் இடையா்காடு பகுதியைச் சோ்ந்த சிவகுருநாதன் மகன் புகழேந்தியும் (24) வேதாரண்யத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனா். இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துக்கொள்ள புகழேந்தி மறுத்துவிட்டதாக, இதுதொடா்பாக, காவல் நிலையத்தில் புகாா் அளித்த வித்யாவை புகழேந்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வித்யா புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை கொண்டாா். இதுகுறித்து, வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து புகழேந்தியை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...