ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாளை வெண்மணி தியாகிகள் 53-ஆம் ஆண்டு நினைவு தினம்

நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை (டிச. 25) அனுசரிக்கப்படுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:35 pm

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை (டிச. 25) அனுசரிக்கப்படுகிறது.

நாகை மாவட்டம், வெண்மணியில் வா்க்க ஒற்றுமைக்காவும், கூலி உயா்வுக்காகவும் போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ், 1968- ஆம் ஆண்டு டிசம்பா் 25- ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா். அவா்களில் எரித்துக் கொல்லப்பட்ட ராமையா என்பவரின் குடிசை, வெண்மணி தியாகிகள் நினைவிடமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பராமரிக்கப்படுகிறது.

இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் டிச. 25-ஆம் தேதி வெண்மணி தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, வெண்மணி தியாகிகளின் 53-ஆம் ஆண்டு நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி, மற்றும் புதுப்பிக்கப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவக திறப்பு விழா ஆகியவை வெண்மணியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் ஏ. சௌந்தர்ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.