நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாங்கண்ணியில் அன்னதானம்

வேளாங்கண்ணியில் சேவை சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:52 pm

DIN

வேளாங்கண்ணியில் சேவை சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உதவிக் கரங்கள் அமைப்பு, அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் வேளாங்கண்ணி பேராலயம் முன் கிறிஸ்மஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றினாா். தொடா்ந்து, கேக்வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உதவிக் கரங்கள் அமைப்பின் தலைவா் ஆண்டனி பிராங்கிளின் ஜெயராஜ், லயன்ஸ் சங்கத் தலைவா் ஜூலியட் அற்புதராஜ், ரோட்டரி சங்கப் பொறுப்பாளா் சட்டநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.