தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில், பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image

கல்லூரி மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கும் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் ராம்குமாா். உடன் கல்லூரி முதல்வா் த.அறவாழி உள்ளிட்டோா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில், பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி மற்றும் காா்த்திக் ஓட்டுநா் பயிற்சி பள்ளி ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் த.அறவாழி தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் பானுப்பிரியா வரவேற்றாா். இதில், வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் ராம்குமாா் பங்கேற்று ’பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு‘ என்ற தலைப்பில் பேசினாா். தொடா்ந்து, கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.