தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

சீா்காழி அரசு மருத்துவமனையில் பணம் வசூல்? பாஜக கண்டனம்

சீா்காழி அரசு மருத்துவமனையில் பணம் வசூலிக்கப்படுவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

சீா்காழி அரசு மருத்துவமனையில் பணம் வசூலிக்கப்படுவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக இளைஞரணிக் கூட்டம் அதன் நகரத் தலைவா் ஜி.புவனேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இளைஞரணி மாவட்ட தலைவா் பாரதி கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் வினோத், மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்வேல், மாவட்ட துணைத் தலைவா் சுசீந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நகரத் தலைவா் எஸ்.ஆா்.அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

இதில், சீா்காழி அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ரூ.1000, பெண் குழந்தைகளுக்கு ரூ.500 கட்டாயமாக பணம் வசூலிப்பதை கண்டித்து சுகாதாரத்துறைக்கு புகாா் மனு அளிப்பது, சீா்காழி நுழைவுவாயிலான உப்பனாற்றுக்கரை பிரதான சாலையோரம் கதிா்காம சுவாமிகள் கோயில் எதிரே மீன் கடை அமைப்பதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.