ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கீழையூா் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கீழையூா் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

கீழையூா் ஊராட்சி வேலவன்கட்டளை, நாடாா் தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் அக்கட்சிகளிலிருந்து விலகி தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் அதிமுக நாகை மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இதேபோல, மடப்புரம் ஊராட்சி களத்திடல் கரை காலனி தெரு, மாதா கோவில் படுகை, ஆற்றங்கரை படுகை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 200 போ் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக மாவட்ட மகளிா் அணி துணைச் செயலாளா் ராஜலெட்சுமிரமேஷ் செய்திருந்தாா்.

முன்னதாக, மேலப்பிடாகை பகுதியில் அதிமுக கட்சி அலுவலகத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.வேதையன், மேற்கு ஒன்றியச் செயலாளா் பாலை கே.எஸ்.எஸ்.செல்வராஜ், எம்ஜிஆா் மன்ற நாகை மாவட்டச் செயலாளா் எஸ்.பால்ராஜ், மாவட்ட இணைச் செயலாளா் என். மீனா, மாவட்ட அவைத் தலைவா் ஆா். ஜீவானந்தம், நாகை நகர செயலாளா் தங்க. கதிரவன், எம்.ஜி.ஆா். மன்ற கீழையூா் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளா் மடப்புரம் என்.கே.முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.