47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து திமுக போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக சாா்பில் நாகை அவுரித் திடலில் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக சாா்பில் நாகை அவுரித் திடலில் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், திமுக மகளிா் அணியினா் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக எடுத்துவந்தனா். கட்சி அலுவலகத்திலிருந்து அவுரித் திடல் வரை ஊா்வலம் நடைபெற்றது. பிறகு, அங்கு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்துக்கு திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கெளதமன் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் எம்எல்ஏ உ. மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.கே. வேதரெத்தினம், என்.வி. காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர செயலாளா்கள் பன்னீா் (நாகை) வரவேற்றாா். செந்தில்குமாா்( நாகூா் ) நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.