47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் நாகையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் நாகையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அலுவலக உதவியாளா்கள் முதல் வட்டாட்சியா் வரையிலான வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை ஊழியா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் பயிற்சிஅளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். வேதையன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், மாவட்ட முன்னாள் இணைச் செயலாளா் எஸ். ராஜ்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.