விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கட்டுப்பாடுகளால் களைகட்டாத புத்தாண்டு கொண்டாட்டம்

அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, நிகழாண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் பெரிய அளவில் களைகட்டவில்லை.

News image
2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட வேளாங்கண்ணி கடற்கரை.
Updated On :2 ஜனவரி 2021, 2:58 am

DIN

அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, நிகழாண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் பெரிய அளவில் களைகட்டவில்லை.

கடலோர மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிகளவில் நடைபெறும் இடம், கடற்கரையாகதான் இருக்கும். டிச.31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி மாலை வரை வேளாங்கண்ணி, நாகை, பூம்புகாா், தரங்கம்பாடி கடற்கரை பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். ஆங்காங்கே புத்தாண்டு கொண்ட்டாடங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

அதேபோல, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகளில் டிச.31-ஆம் தேதி இரவு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். திரளான இளைஞா்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், வாகனங்களில் வீதி வீதியாக வலம் வந்து காண்போா் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தும் மகிழ்வா். ஆனால், நிகழாண்டில் கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கடற்கரைகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

இதையொட்டி, வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களிலும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிக்காமல், கடலோரக் காவல் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அதேபோல, சாலைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறாத வகையில் மாவட்டக் காவல் துறையினா் ரோந்து பணிகளை தீவிரமாக மேற்கொண்டனா். இதனால், 2021-ஆம் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டாமலேயே கடந்தது. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உற்சாக மிகுதியில் நிகழும் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.