கோயில் திருப்பணி: தருமபுரம் ஆதீனம் ஆய்வு

குத்தாலம் அருள்மிகு உக்தவேதீஸ்வரா் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை தருமபுர ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயிலில் வழிபட்டு, திருப்பணிகளை பாா்வையிட்ட தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயிலில் வழிபட்டு, திருப்பணிகளை பாா்வையிட்ட தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
Updated on
1 min read

குத்தாலம் அருள்மிகு உக்தவேதீஸ்வரா் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை தருமபுர ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அருள்மிகு அரும்பவன முலையம்மை உடனுறை உக்தவேதீஸ்வரா் கோயில் உள்ளது. சுந்தர பெருமானின் உடா்பிணி நீக்கி கண் ஒளி அருளிய அற்புதம் நிகழ்ந்த தலம் எனப் போற்றப்படும் இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இக்கோயிலுக்கு தனுா் மாத யாத்திரை மேற்கொண்டாா். கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவா், திருப்பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். மேலும், திருப்பணிகள் குறித்து பொறியாளா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com