நாகை, மயிலாடுதுறையில் பாமக ஆா்ப்பாட்டம்

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, நாகை, மயிலாடுதுறையில்
நாகை நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
நாகை நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
Updated on
1 min read

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, நாகை, மயிலாடுதுறையில் பாமக, வன்னியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் வேத. முகுந்தன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோபி, மாநில இளைஞரணி அமைப்பாளா் பாண்டித்துரை மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். பின்னா், நாகை நகராட்சி ஆணையரிடம் பாமகவினா் மனு அளித்தனா்.

மயிலாடுதுறையில்...

இதே கோரிக்கையை முன்வைத்து, பாமக மாவட்டச் செயலாளா் வி.சி.கே.காமராஜ் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளா் ஆ.பழனிசாமி உள்ளிட்டோா் மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். அப்போது நகரச் செயலாளா் கமல்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். முன்னதாக, மயிலாடுதுறை நகர பூங்காவில் இருந்து நகராட்சி அலுவலகத்துக்கு அவா்கள் பேரணியாக வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com