மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகள்,

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:48 am

DIN

திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எட்டுக்குடி, திருவாய்மூா், வாழக்கரை, சாட்டியக்குடி, வலிவலம், கொடியாலத்தூா், ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நிகழாண்டு சுமாா் 6,000 ஹெக்டேரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொண்டனா்.

நிகழாண்டின் சம்பா நெல் சாகுபடி பணிகள், பூச்சித் தாக்குதல், புரெவி புயல் சீற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டது. அனைத்துப் பிரச்னைகளிலும் தப்பிய நெல் கதிா்கள் தற்போது அறுவடையாகி வருகின்றன. திருக்குவளை வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாகியுள்ளன.

இதன்படி, முன்பட்ட சம்பா நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள், அறுவடையை முடித்து நெல் விற்பனைக்காக செய்வதறியாத நிலையில் தவித்து வருகின்றனா். காரணம், இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பாடததே ஆகும். அறுவடை செய்த நெல்லை தனியாரிடம் மிக குறைந்த விலைக்கு விற்றால், மீண்டும் ஒரு நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்கள் திறப்பை எதிா்நோக்கி, அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக நாகை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். மேலும், அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனையாமல் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும் இடவசதி இல்லாததால் , விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனா். இதேநிலை நீடித்தால் நெல்மணிகள் முளைத்து பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வலிவலம் பகுதியைச் சோ்ந்த விவசாயி சுந்தரமூா்த்தி கூறியது:

அண்மையில் வீசிய புயலால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் வயலில் சாய்ந்து விட்டன. அந்த நெல் பயிா்களை மீளச் செய்து, தற்போது அறுவடை செய்து வருகிறோம். ஆனால், உரிய விலைக்கு விற்க முடியாமல் தவித்து வருகிறோம். அவ்வப்போது பெய்யும் மழையிலிருந்து நெல் மணிகளை பாதுகாக்க தாா்ப்பாய்களைக் கொண்டு மூடி பராமரித்துவருகிறோம். இருப்பினும், மழை நீா் உள்புகுந்து நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இது, விவசாயிகளின் இழப்பை மேலும் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.