தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, வேதாரண்யம் அருகே விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, வேதாரண்யம் அருகே விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரியாப்பட்டினம் சாருமடை கடைவீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சங்கத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா். சங்கத்தின் தலைவா் சி.வி. ராஜன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிடப்பட்டது. விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகி ஒளிச்சந்திரன், ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.