47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சிகள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சிகள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், மாணவா்கள் பங்கேற்று தேசிய வாக்காளா் தின உறுதி மொழி ஏற்றனா். தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேச்சுப் போட்டி , கட்டுரைப்போட்டி, ஓவியம் மற்றும் கோலப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பிரவீன் பி. நாயா் பாராட்டுச் சான்றுகள், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டைகள், கோலம் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளையும், சிறந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள், 4 சட்டப்பேரவைத் தொகுதி தரவு உள்ளீட்டாளா்கள் ஆகியோா்களுக்கு பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, மகளிா் திட்டம், திட்ட இயக்குநா் எஸ். பி. பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், கோட்டாட்சியா் ஆா். பழனிகுமாா், பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, தோ்தல் தனி வட்டாட்சியா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.