ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மொழிப்போர் தியாகிகள் தினம்: மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அனைத்து கட்சியினர், தமிழார்வலர்கள் அஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அனைத்து கட்சி நிர்வாகிகள்

News image
மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், எம்எல்ஏக்கள் வீ.ராதாகிருஷ்ணன், பி.வி.பாரதி உள்ளிட்டோர்.
Updated On :25 ஜனவரி 2021, 9:44 am

DIN

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அனைத்து கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தமிழார்வலர்கள் திங்கள்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீவைத்து கொண்டு உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ரெங்கநாதன், தங்கமணி, நகர செயலாளர் நாஞ்சில் கே.கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பா.சந்தோஷ்குமார், சி.ராஜேந்திரன், ஏ.நடராஜன், ஏ.கே.சந்திரசேகர், குத்தாலம் பேரூர் செயலாளர் எம்.சி.பாலு, முன்னாள் நகர செயலாளர்கள் எஸ்.அலி, ஸ்டாண்டு கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Story image

திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சிவதாஸ், மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், மன்னம்பந்தல் ஊராட்சி தலைவர் பிரியா பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் மண்டல செயலாளர் கலியபெருமாள், மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர். 

தமிழர் தேசிய முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் பேராசிரியர் இரா.முரளிதரன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை துரை.குணசேகரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.