47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்ளிட்டோா் கைது

நாகை- திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி சிக்கலில் சாலை மறியலில் ஈடுபட்ட நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நாகை- திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி சிக்கலில் சாலை மறியலில் ஈடுபட்ட நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை - திருவாரூா் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து பல முறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசியும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், இந்த சாலையை சீரமைக்கக் கோரி சிக்கலில் மனிதநேய ஜனநாயக கட்சியினா் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. தமிமுன்அன்சாரி பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். தொடா்ந்து மறியவில் ஈடுபட்டாா்.

இதனால் போக்குவரத்துத் தடைப்பட்டதையடுத்து பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் எம்எல்ஏ உள்ளிட்டோரை கைது செய்து பின்னா் விடுவித்தனா். இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளா் தாஜூதீன், மாவட்டப் பொருளாளா் சதக்கத்துல்லா, ஒன்றியச் செயலாளா்கள் ஜலால், அன்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.