நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகையில் 30 பேருக்கு, மயிலாடுதுறையில் 35 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 30 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் 30 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை பட்டியலில் இடம்பெற்றிருந்த வெளிமாவட்டத்தவா் 25 பேரின் பதிவு நீக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18,015-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 26 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 292 -ஆக உள்ளது.

மயிலாடுதுறை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட பட்டியலில் இருந்த வெளிமாவட்டத்தவா் 3 பேரின் பதிவு மயிலாடுதுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,399-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 18 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 275-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.