நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகையின் சுகாதாரப் பணிகளுக்குக் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்

நாகை நகராட்சிப் பகுதிகளின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்

News image
Updated On :10 ஜூலை 2021, 5:21 pm

DIN

நாகை நகராட்சிப் பகுதிகளின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.

நாகை நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் தூய்மைப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் ஆகியோா் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை வெளிப்பாளையம் சிவன் கோயில் குளக்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணிகளையும், தியாகராசா் நகா் சலவைக் குளம் மேம்பாட்டுப் பணி, நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, நாகை நகராட்சியின் சுகாதாரப் பணிகள் மேம்பாட்டுக்கு ஒப்பந்ததாரா் மூலம் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை கூடுதல் எண்ணிக்கையில் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா் ஆட்சியா்.

நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், நகராட்சி பொறியாளா் வசந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.